பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்: வழக்கம் போல் சாதனை படைத்த மாணவிகள்!?

  0
  4
  ப்ளஸ் ஒன் தேர்வு முடிவுகள்

  பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை  வெளியாகியுள்ளது. 

  சென்னை:  பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை  வெளியாகியுள்ளது. 

  தமிழகத்தில் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை காலை சரியாக 9.30க்கு வெளியாகியுள்ளன. இதில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.5 சதவீதம் பேரும், மாணவர்கள் 93.3 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 95 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

  students

  இந்த பொதுத்தேர்விற்கான முடிவில் முதல் இடத்தை ஈரோடு மாவட்டம் பிடித்துள்ளது. இதன் தேர்ச்சி விகிதம்  98.09 சதவீதமாகும். அதே போல்  97.90 சதவீத தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடத்தையும், கோவை மாவட்டம் 97.60 சதவீத தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. 

  student

  பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் பள்ளிகளில் வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும்,  SMS மூலம் அனுப்பப்படும். அல்லது  www.tnresults.nic.in , www.dge1.nic.in , www.dge2.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.