பிலிப்பைன்ஸ் நாட்டில் 80 இந்திய மருத்துவ மாணவர்கள் தவிப்பு – இந்திய அரசிடம் உதவி செய்ய கோரிக்கை

  0
  5
  Philippines

  பிலிப்பைன்ஸ் நாட்டில் 80 இந்திய மருத்துவ மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.

  மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் 80 இந்திய மருத்துவ மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.

  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மலேசியா, ஆஃப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கும் வரும் விமான சேவைகளுக்கு 31-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா விமான நிலையத்தில் 80 இந்திய மருத்துவ மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.

  ttn

  பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து வரும் இந்திய மாணவர்களை தாய்நாடு திரும்பும்படி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 19-ஆம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் எனவும் கூறியுள்ளது. ஆனால் பிலிப்பைன்ஸில் இருந்து விமானங்கள் இந்தியாவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்திய மாணவர்கள் அந்த நாட்டில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் முன்பதிவு செய்த விமான டிக்கெட்டுகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள் தவித்து வருகின்றனர். இதனால் தங்களை மீட்டு செல்லும்படி இந்திய அரசிடம் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.