பிறந்த நாளன்று நடிகர் ஹரிஷ் கல்யாண் செய்த செயல்! புகழ்ந்து தள்ளும் விவேக்! 

  0
  6
  ஹரிஷ் கல்யாண்

  நடிகர் ஹரிஷ் கல்யாண் செய்த செயலை பார்த்து நடிகர் விவேக் பாராட்டியுள்ளார். 

  சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண் செய்த செயலை பார்த்து நடிகர் விவேக் பாராட்டியுள்ளார். 

  கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். அதைத்தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் மற்றும் இஸ்படே ராஜாவும் இதய ராணியும் போன்ற திரைப்படம் இவரது காரியரில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. 

  அதைத்தொடர்ந்து தற்போது கைவசம் மூன்று படங்களை வெய்திருக்கும் இவர் தற்போது தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் இன்று 29வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதற்காக அவரது ரசிகர்கள் ஏராளமானார் தங்களது வாழ்த்துக்களைச் சமூகவலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வந்தனர். 

  harish

  இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண், தனது பிறந்தநாளை முன்னிட்டு மரம் நட்டுவைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘இவ்வாறே என் பிறந்த நாளை தொடங்கியுள்ளேன்! புரசைவாக்கம் நடுநிலைப்பள்ளியில்! Thank you so much @Actor_Vivek sir for inspiring & helping me out with this. உங்கள் நற்பணிகளைப் பின்பற்றி, இந்த பயணத்தைத் தொடங்கியுள்ளோம்’ என்று பதிவிட்டுள்ளார். 

  hk

  இதற்கு பதிலளித்த விவேக், ‘நன்றி ஹரிஷ் கல்யாண். உங்கள் பிறந்த நாளில் ஒரு மரம் பிறக்கிறது. பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாம் இணையும் தாராளப்பிரபு வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.