பிறந்த கோலத்தில் சுற்றித் திரியும் சைகோ ! நள்ளிரவில் விடும் ஊளையால் மக்கள் அச்சம் !

  0
  1
  nudeperson

  கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நள்ளிரவில் நிர்வாண கோலத்தில் ஒரு நபர் சைக்கோ போல சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

  கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நள்ளிரவில் நிர்வாண கோலத்தில் ஒரு நபர் சைக்கோ போல சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

  வி என்ஆர் நகரில் வசித்து வரும் ஜாபர் அலி என்பவர் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும்போது தெருவில் ஏதோ சத்தம் கேட்டது. என்னவென்று பார்ப்பதற்காக அவர் கதவை திறந்து பார்த்தபோது எதுவும் தென்படவில்லை. பின்னர் பொழுது விடிந்ததும் தன்னுடைய வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை பார்த்தார். அதில் நள்ளிரவில் ஒரு நபர் உடலில் ஆடையில்லாமல் அங்கும் இங்கும் சுற்றித்திரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

  nudeperson

  இது குறித்து காவல்நிலையத்தில் ஜாபர் அலி புகார் கொடுத்துள்ளார். மேலும் நள்ளிரவில் மட்டுமே வரும் அந்த நபர் அங்குள்ள வீடுகளை நோட்டம் இடுவதாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஒரு ஒலி எழுப்புவதாகவும் தெரிகிறது. இதுமட்டுமின்றி வீடுகளில் உள்ள ஜன்னல்களை திறந்து உள்ளே எட்டி பார்க்கும் வேலையையும் அந்த நபர் செய்து வருகிறார். அந்த நபர் யார்? எதற்காக இரவில் நிர்வாண கோலத்தில் வரவேண்டும், சைக்கோ போல் நடிக்கிறாரா? வீட்டில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் நோட்டம் இடுகிறாரா பகலில் எங்கு செல்கிறார் என பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.