பிறந்த குழந்தைக்கு அருகில் “தாய்”க்கு பதில் நாய் -நாய் கடித்தது, குழந்தை  துடித்தது -“Dog”டர்கள் உலவும் ஆஸ்பத்திரி… 

  0
  10
  Representative Image

  உத்தரபிரதேசத்தில்  ஆபரேஷன் தியேட்டருக்குள் நாய் தாக்கியதில்  குழந்தை இறந்தது .
  ஆபரேஷன் தியேட்டருக்குள்ளிருந்து ஒரு நாயை  மருத்துவமனை ஊழியர்கள் விரட்டியதை குடும்ப உறுப்பினர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர் . குடும்ப உறுப்பினர்கள் ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தபோது, கழுத்தில் பல காயங்களுடன் தரையில்  குழந்தை இறந்து கிடந்தது கண்டு அழுதனர். 

  உத்தரபிரதேசத்தில்  ஆபரேஷன் தியேட்டருக்குள் நாய் தாக்கியதில்  குழந்தை இறந்தது .
  ஆபரேஷன் தியேட்டருக்குள்ளிருந்து ஒரு நாயை  மருத்துவமனை ஊழியர்கள் விரட்டியதை குடும்ப உறுப்பினர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர் . குடும்ப உறுப்பினர்கள் ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தபோது, கழுத்தில் பல காயங்களுடன் தரையில்  குழந்தை இறந்து கிடந்தது கண்டு அழுதனர். 

  உத்தரபிரதேசத்தின் ஃபருகாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டருக்குள்  திங்கள்கிழமை ஒரு நாயால் ஒரு குழந்தை  கொலை செய்யப்பட்டது. இந்த சம்பவம் நடந்த மருத்துவமனை பதிவு செய்யப்படாமல்  அரசு மருத்துவமனைக்கு அருகில் இயங்கி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆபரேஷன் தியேட்டருக்குள் இருந்து ஒரு நாய் வெளியேறி செல்வதை தாங்கள் கவனித்ததாகவும், அதனால் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு பிறந்த ஆண் குழந்தை இறந்துவிட்டதாகவும்  ஆண் குழந்தையின் உறவினர்கள்  தெரிவித்தனர்.
  சதர் கோட்வாலி போலீசில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் படி, குழந்தையின் தந்தை ரவிக்குமார் தனது மனைவி காஞ்சனையை  திங்கள்கிழமை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும், பின்பு பிரசவிக்க ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறினார்.

  new-born-baby

  பிரசவத்திற்குப் பிறகு, காஞ்சன் வார்டுக்கு மாற்றப்பட்டார், ஆனால் குழந்தையை பின்னர் மாற்றுவதாக குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.ஒரு மணி நேரம் கழித்து, குழந்தை இறந்துவிட்டதாக குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது..
  ஆனால் உறவினர்கள் தாங்கள் குழந்தையின் உடலை தரையிலிருந்து  கண்டெடுத்ததாகவும், அதில் கழுத்து மற்றும் உடலின் பிற பாகங்களில் ஆழமான நாய்க்கடி  இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
  குழந்தையின் உடல்  பிரேத பரிசோதனைக்காக பாதுகாக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

  மாவட்ட நீதிபதி  அந்த மருத்துவமனை மீது வழக்கு பதிய  உத்தரவிட்டுள்ளார் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ) சந்திர சேகர் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
  டாக்டர் மோஹித் குப்தா மற்றும் பிரசவத்தின்போது உடனிருந்த சில ஊழியர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.