பிரேமலதா யோக்கியதை இதுதான்: தே.மு.தி.க. முன்னாள் நிர்வாகி அதிரடி!

  0
  5
  பிரேமலதா- சந்திரக்குமார்

  துரைமுருகனை பிரேமலதா  சாடியதற்கு தேமுதிகவிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்த சந்திரக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

  சென்னை: துரைமுருகனை பிரேமலதா  சாடியதற்கு தே.மு.தி.க.விலிருந்து வெளியேறி தி.மு.க.வில் இணைந்த சந்திரக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

  தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘ துரைமுருகன் பேசியதை முற்றிலும் உளறலாகத்தான் பார்க்கிறேன்.  வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வளவு கீழ்த்தரமான அரசியல் பண்ணுவாங்களான்னு துரைமுருகனை பார்த்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது இதை ஒரு வெட்கக்கேடாகக் கருதுகிறேன். அவர் பேசின பேச்சு முரண்பாடானது. துரைமுருகன் உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே தூங்குவார் என்று கேள்வி பட்டிருக்கிறேன். தூக்கத்தில் பேசினாரா என்று தெரியவில்லை. வயதின் மூப்பின் காரணமாக துரைமுருகன் தூக்கத்தில் பேசினாரா என சந்தேகம் உள்ளது’ என்றார்.

  இந்நிலையில், இது குறித்து தேமுதிகவிலிருந்து வெளியேறி தி.மு.க.வில் இணைந்த சந்திரக்குமார் பதிலளித்துள்ளார். அப்போது, ‘துரைமுருகனை தனிப்பட்ட முறையில் சந்தித்தோம் என திரும்பத் திரும்ப ஒரே பொய்யை கூறி வருகின்றனர். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்றனர். பத்திரிகையாளர்கள் அவர்களைப் பார்த்துவிட்டார்கள் என்பதற்காக நாங்கள் போய் பேசுவோமா? நான் என்ன முட்டாளா? என கேட்டு வருகின்றனர். நீங்கள் முட்டாள் கிடையாது. தமிழக மக்களை நீங்கள் முட்டாளாகப் பார்க்கிறீர்கள். எங்கள் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தே.மு.தி.க.வின் பிரேமலதா, சுதீஷ் ஆகியோரின் யோக்கியதை இதுதான் என்பதை நிரூபித்துவிட்டார்’ என்று கூறியுள்ளார்.