பிரிவினை மத அரசியலை தவிர்த்திடுவோம்! – சீமான் வேண்டுகோள்

    0
    1
    பிரிவினை மத அரசியலை தவிர்த்திடுவோம்! - சீமான் வேண்டுகோள்

    பிரிவினைவாத அரசியலை இக்கட்டான இந்த தருணத்திலாவது கைவிடுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

     நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    “டெல்லி நிஜாமுதீனிலுள்ள தப்லீக் ஜமாத் மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று பரவியது என்பது எதேச்சையானது. கெடுவாய்ப்பாக எதிர்பாராது நிகழ்ந்த ஒரு விபத்து. ஆனால், அதற்கு மதச்சாயம் பூசி, இந்த நெருக்கடி காலகட்டத்திலும் மத துவேசம் பூசி, பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள முனையும் மதவாதிகளின் இழிவான அரசியல் மனிதத்தன்மையற்றது. அதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

    21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அறிவித்த மத்திய அரசு தனது ஆளுகைக்குப்பட்டிருக்கும் டெல்லியில் பல்லாயிரக்கணக்கில் மக்களைக் கூடவிட்டு, வீதியில் நடந்தே பயணப்பட வைத்து, சமூக விலகலை தகர்த்ததும், ஊரடங்கு உத்தரவு விடுக்கப்பட்ட அடுத்த நாளே உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அம்மாநில பா.ஜ.க அரசே முன்னின்று அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியதும்தான் நாட்டை பிளக்கும் கொடிய மதவாத அரசியல். அத்தகைய பிரிவினைவாத அரசியலை இக்கட்டான இந்த தருணத்திலாவது கைவிட்டு மனிதத்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டுமென அறிவுறுத்துகிறேன். அண்ணல் அம்பேத்கர் கூறியதை மீண்டும் சொல்கிறேன், “உங்களிடமிருக்கும் இரக்கக் குணத்தையும் மனிதாபிமானத்தையும் செயல்படுத்தத் தொடங்குங்கள். இருந்தால் அதை செயல்படுத்திக்காட்டுங்கள்” என்று கூறியுள்ளார்.