பிரியாணி கடையை வளைத்துப்போட்ட அதிமுக விவிஐபி… அமெரிக்க நிறுவனத்துடன் கூட்டு..!

  0
  7
  பிரியாணி

  இனி, இந்தியா முழுக்க இருக்கிற மெக் டொனால்டு கடைகளில் திண்டுக்கல் பிரியாணியும் கிடைக்குமாம்.

  அமெரிக்க பர்கரையும், திண்டுக்கல் பிரியாணியையும் ஒன்றாக சேர்த்து வைத்திருக்கிறார் ஓ.பி.எஸ்.

  தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக துணை முதல்வர் பன்னீர்செல்வம் அமெரிக்கா போயிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பர்கர் நிறுவனமான, மெக் டொனால்டு நிறுவனம் உலகம் முழுக்க கடைகளை நடத்தி வருகிறது.

   OPS

  இந்த நிறுவனத்தையும், தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி கடையையும், பன்னீர்செல்வம் ஒண்ணு சேர்த்து வைத்திருக்கிறார். இனி, இந்தியா முழுக்க இருக்கிற மெக் டொனால்டு கடைகளில் திண்டுக்கல் பிரியாணியும் கிடைக்குமாம். இதற்கான ஒப்பந்தத்தை, இரண்டு நிறுவன அதிகாரிகளும், பன்னீர்செல்வம் முன்னிலையில் போட்டிருக்கிறார்கள். dindigul

  இதில் டாப் சீக்ரெட் என்னவென்றால், இந்த திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணிக் கடையில் ஓ.பி.எஸும் ஒரு பார்ட்னர். கிட்டத்தட்ட அதிக பங்குகள் ஓ.பி.எஸூக்கு இருக்கிறது. இப்போ சொல்லுங்கள் சோழியன் குடுமி சும்மா ஆடுமா..? எடப்பாடிக்கும் எக்கச்சக்கமான பினாமி நிறுவனங்கள் உள்ள கதையை எங்கே போய்ச் சொல்ல..?