பிரிந்து சென்ற மனைவி: மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்ட கணவர்!?

  0
  3
  கணவன் மனைவி

  மனைவி பிரிவால் உடம்பில் மின்சாரம் பாய்ச்சி கணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை: மனைவி பிரிவால் உடம்பில் மின்சாரம் பாய்ச்சி கணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கோபால் கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்பத்துடன் சென்னை மணலி திருவிக நகர் பகுதியில்  வசித்து வந்தார்.  இவர் தினமும் குடித்து விட்டு மனைவியை அடித்துத் துன்புறுத்துவார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து கணவரின் கொடுமை பொறுக்க முடியாமல் அவரது மனைவி அவரை   விட்டு பிரிந்து சென்றுள்ளார். 

  suicide

  இந்நிலையில் கோபால் இரண்டு தினங்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்துவந்துள்ளார். அவரது வீட்டுக் கதவும் மூடியபடியே இருந்துள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினருக்குச் சந்தேகம் ஏற்படவே போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர் . 

  police

  இதையடுத்து   சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணலி போலீசார் கோபால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது,  படுத்த நிலையில் அவர் சடலமாகக் கிடந்துள்ளார். அவரின் வயிற்றின் இடுப்பு பகுதியில் மின் வயர் கட்டப்பட்டிருந்ததும், ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது,. மேலும் விஷ பாட்டில் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இதன் மூலம் அவர் மின்சாரம் பாய்ச்சி இறந்திருக்கக் கூடும் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர்.

  murder

  இதைத் தொடர்ந்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.