பிரபாஸின் ’சாஹோ’ ரிலீஸ் தேதி அதிரடி மாற்றம்!

  0
  3
  பிரபாஸ்

  பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு மாற்றி அறிவித்துள்ளது.

  சென்னை: பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு மாற்றி அறிவித்துள்ளது.

  பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் சாஹோ. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். இவர்களுடன் ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, ஈவ்லின் சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

  தமிழ், தெலுங்கு, இந்தி என  3 மொழிகளில் உருவாகிவரும் இந்த படத்தின் ரூ.150 கோடிக்கும் மேல் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தப் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது திடீரென தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 30-ம் தேதி படம் திரைக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  sahoo

  இது குறித்து படக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘கிராஃபிக்ஸ் பணிகள் முடிவடையாததாலும், படத்தின் சண்டைக் காட்சிகளைத் துல்லியமாகக் கொண்டு வர முயற்சி செய்வதாலும் படத்தின் பணிகளை முடிக்க இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.