பிரபல நடிகருடன் ஜோடி சேரும் பிரியா பவானி ஷங்கர் 

  0
  12
  priya bhavani shankar

  நடிகை பிரியா பவானி ஷங்கர் புதிய திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

  சென்னை: நடிகை பிரியா பவானி ஷங்கர் புதிய திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

  பிரபல தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்தவர் பிரியா பவானி ஷங்கர். பின்பு மேயாதமான் படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். அதைத்தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்தார். 

  dquler salman

  இவர் தற்போது எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர் மற்றும் அதர்வாவுக்கு ஜோடியாகக் குருதி ஆட்டம் போன்ற பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

  இந்நிலையில் பிரியா பவானி ஷங்கர் தற்போது ரா.கார்த்திக் இயக்கத்தில் முதல் முறையாகப் பிரபல நடிகரான  துல்கர் சல்மான்னுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குறித்து  அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.