பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் புற்றுநோயால் உயிரிழப்பு: கலங்கும் ரசிகர்கள்!?

  0
  1
  ஆசிப் அலியின்  2 வயது மகள்

  கிரிக்கெட்  வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் நூர் ஃபாத்திமா புற்றுநோயால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  அமெரிக்கா: கிரிக்கெட்  வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் நூர் ஃபாத்திமா புற்றுநோயால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

   

  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ஆசிப் அலி. இவர் தற்போது  இங்கிலாந்தில் நடைபெற்று வரும் அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் விளையாடிக் கொண்டிருந்தார்.

  asifali

  இந்நிலையில் ஆசிப் அலியின்  2 வயது மகள் நூர் ஃபாத்திமா, புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் அமெரிக்காவில் தனது தாயுடன் சிகிச்சைக்காகச் சென்றிருந்தார். அங்கு சிறுமி நூர் ஃபாத்திமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இருப்பினும் புற்றுநோயானது 4வது கட்டத்தை எட்டி விட்டதால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். 

  asif

  இதைத் தொடர்ந்து மகள் இறந்த செய்தியால் கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்து விட்டு ஆசிப் அலி  உடனடியாக அமெரிக்கா புறப்பட்டுள்ளார். இரண்டே வயதான சிறுமி நூர் ஃபாத்திமாவின் இறப்பிற்குச் சகா கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் இரங்கலும், ஆறுதலும் கூறி வருகின்றனர்.