பிரதமர் மோடியை விமர்சித்தவரின் இந்திய குடியுரிமை ரத்து!

  7
  பிரதமர் மோடி

  பாஜக அரசு சமீபகாலங்களில் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பொதுவான குற்றச்சாட்டு பொதுமக்களிடையேயும், எதிர்கட்சிகளிடையேவும் எழுந்துள்ளது. இந்நிலையில், டைம்ஸ் பத்திரிக்கையில் மோடியை விமர்சித்து கடந்த தேர்தலின் போது கட்டுரை எழுதிய பத்திரிக்கையாளர் அதீஷ் தசீரின் குடியுரிமையை ரத்து செய்துள்ளது உள்துறை அமைச்சகம்.

  பிரபல பத்திரிக்கையாளரான

  modi

  , இந்தியர்களுக்கான குடியுரிமையுடன் அமெரிக்காவில், நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த தேர்தலில் போது, மோடி இந்தியாவில் மத பிரிவினைவாதத்தில் ஈடுபட்டு வருவதாக டைக்ஸ் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரை நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. வெளிநாடுகளிலும் இந்த கட்டுரை பெரும் விவாதங்களை கிளப்பியது. இந்நிலையில், தனது இந்திய குடியுரிமை அட்டையை புதுப்பிப்பதற்காக அதிஷ் தசீர் விண்ணப்பித்திருந்தார். தனது விண்ணப்பத்தில், பெற்றோர் பாகிஸ்தானில் பிறந்தவர்கள் என்கிற தகவலை மறைத்து விட்டார் என காரணம் காட்டி உள்துறை அமைச்சகம் நிராகரித்து விட்டது. 
  மத்திய உள்துறை அமைச்சகம், இது குறித்து பதிலளிக்க வெறும் 24 மணி நேரமே கொடுத்திருந்ததாகவும், சட்டப்படி 21 நாட்கள் கொடுத்திருந்தாக வேண்டும் என்றும் இது குறித்து பத்திரிக்கையாளர் அதீஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார். அதீஷ் தசீரின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.