பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் எழுதியுள்ள 9 பக்க கடிதம் !

  3
  MK Stalin- Narendra modi

  மிழகத்தில் மத்திய அரசின் பணிகளுக்கு 90% இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசின் புதிய கொள்கையைக் கைவிட வேண்டும்

  தமிழ்நாட்டில் உள்ள 16 முக்கிய பிரச்சனைகளைக் குறிப்பிட்டு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு 9 பக்க அளவில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனை இன்று திமுக எம்.பிக்கள் திருச்சி சிவா, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் நரேந்திர மோடியிடம் வழங்கியுள்ளனர். 

  ttn

  அந்த கடிதத்தில், “மருத்துவ படிப்புக்காக நடத்தப்படும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். மாநிலங்களின் ஆறுகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மத்திய அரசின் பணிகளுக்கு 90% இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசின் புதிய கொள்கையைக் கைவிட வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டிட பணிகளை வேகப்படுத்த வேண்டும். தமிழக அரசுக்கு மத்திய அரசு தர வேண்டிய ரூ.7825 கோடியை விடுவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

  tn

  மேலும், “மாநிலங்களுக்கு சுயேட்சை ஆட்சி இருக்கும் நிலையில் அதனை நிலை நிறுத்தும் படி, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் சட்டங்களை இயக்க வேண்டும். எங்கள் தாய்மொழியான தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், தமிழகத்தின் மேகதாது பகுதியில் கர்நாடக அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது. நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்” உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விரிவாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.