பிரதமர் மோடிக்கும், இரு தலைவர்களுக்கும் சிறப்பான வரவேற்பை நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி – முதலமைச்சர் பழனிசாமி

  0
  7
  Edappadi Palanisamy

  இந்திய- சீன நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்காக தமிழ்நாட்டை தேர்ந்தெடுக்க மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும், இரு பெரும் தலைவர்களுக்கு சிறப்பான வரவேற்பை நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் தமிழக முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். 

  இந்திய- சீன நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்காக தமிழ்நாட்டை தேர்ந்தெடுக்க மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும், இரு பெரும் தலைவர்களுக்கு சிறப்பான வரவேற்பை நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் தமிழக முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். 

  இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரம்பரியம் மற்றும் பண்பாடு மிக்க தமிழ்நாட்டை, குறிப்பாக சரித்திர புகழ்வாய்ந்த மாமல்லபுரத்தை, இந்திய -சீன நாடுகளுக்கு இடையேயான பேச்சு வார்த்தைக்கு தேர்ந்தெடுத்தமைக்காக நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் முதற்கண் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உலக அரங்கில் நமது நாட்டின் பெருமையை உயர்த்தி, இன்று உலகத் தலைவர்களுக்கு இடையே உயர்ந்த தலைவராக விளங்கும் மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், இந்த செய்கையின் மூலம் தமிழ்நாட்டின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளார். இது உலக நாடுகளின் பார்வையை தமிழ்நாட்டின் பக்கம் திருப்பியுள்ளது. இந்த இரு பெரும் தலைவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு நல்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக மாணவச் செல்வங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி!

  Modi XI

  நம் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளின் மூலம் இரு பெரும் தலைவர்களை மகிழ்வித்ததோடு மட்டுமல்லாமல் அனைவரையும் மகிழ்வித்த கலைஞர் பெருமக்களுக்கும் எனது நன்றி! இந்த கலை நிகழ்ச்சிகளை நல்ல முறையில் ஏற்பாடு செய்த அமைச்சர் பெருமக்களுக்கும் எனது நன்றி! சிறப்பான முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்ட காவல் துறையினருக்கு எனது நன்றி! அனைத்து ஏற்பாடுகளையும் சிறந்த முறையில் ஒருங்கிணைத்த வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை மற்றும் அனைத்து அரசுத் துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.