பிரதமர் பேச்சில் அதிகம் எதிர்பார்த்தேன்! நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார் – கமல்ஹாசன் ட்வீட்

  0
  2
  கமல்ஹாசன்

  பிரதமர் பேச்சில் அதிகம் எதிர்பார்த்தேன்! நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார் – கமல்ஹாசன் ட்வீட்

  பிரதமர் மோடி நேற்று வீடியோ மூலம் மக்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சவாலுக்கு  எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி.அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். ஊரடங்கு மதித்து நடக்கும் மக்களுக்கு நன்றி. இந்தியாவில் மக்கள் ஊரடங்கு உலக அளவில் முன்னுதாரணமாக மாறியுள்ளது. ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்கை அணையுங்கள். வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

  இந்நிலையில் கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன், பாதுகாப்புக் கவசனங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழை மக்களி வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்” என குறிப்பிட்டுள்ளார்.