பிரதமரின் கால் தூசிக்கு… பத்திரிகையாளரை அவதூறாக விமர்சித்த எஸ்.வி.சேகர்!

  0
  16
  எஸ் வி சேகர்

  எந்த ஒரு அவகாசமும் இன்றி பிரதமர் மோடி நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவை கொண்டுவந்தது தொடர்பாக மக்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். மக்கள் ஊரடங்கு என்று அறிவித்த நேரத்திலேயே ஊரடங்கு பற்றி அறிவித்திருக்கலாம், அல்லது மக்களுக்கு வீட்டிலேயே இருப்பதற்கான சலுகைகளை அறிவித்திருக்கலாம்.

  பிரதமரின் கால் தூசிக்கு பெறாத சொறி நாய் என்று மிக மோசமாக பத்திரிகையாளர் ஒருவரை எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.
  எந்த ஒரு அவகாசமும் இன்றி பிரதமர் மோடி நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவை கொண்டுவந்தது தொடர்பாக மக்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். மக்கள் ஊரடங்கு என்று அறிவித்த நேரத்திலேயே ஊரடங்கு பற்றி அறிவித்திருக்கலாம், அல்லது மக்களுக்கு வீட்டிலேயே இருப்பதற்கான சலுகைகளை அறிவித்திருக்கலாம். அப்படி எதையும் செய்யாமல் திடீரென்று ஊரடங்கு பிறப்பித்ததால் ஆயிரக் கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டனர். வாழவே வழியில்லை என்ற நிலையில் நடந்தே சொந்த ஊருக்கு செல்ல ஆரம்பித்தனர்.

  modi

  இந்த நிலையின் மனதின் குரல் நிகழ்ச்சிவாயிலாக பேசிய பிரதமர், அவசியம் காரணமாக ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. அதற்காக மக்கள் படும் கஷ்டத்துக்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இதை தினமலர் செய்தியாக வெளியிட்டிருந்த பதிவை பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்திருந்தார். ஒன்னு ரெண்டு வேலையா பண்ணிருக்க உன்னை மன்னிக்க என்று விமர்சித்து தினமலர் முதல் பக்கத்தை அவர் ஷேர் செய்திருந்தார்.

  இதனால் பாரதிய ஜனதாவை சேர்ந்த எஸ்.வி.சேகர் கொந்தளித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “நம் நாட்டின் பிரதமருக்கு கால் தூசி கூட பெறாத சொறி நாயெல்லாம் அவரைப்பாத்து குலைக்குது” என்று குறிப்பிட்டுள்ளார். எஸ்.வி.சேகரின் இந்த அநாகரீகமான பதிவை பா.ஜ.க தொண்டர்கள் வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன. தமிழக பா.ஜ.க இதைவிட மோசமாக விமர்சித்து பதிவுகளை வெளியிடும் என்பதால் யார் இவர்களைக் கட்டுப்படுத்துவது என்ற ஆதாங்கம் நடுநிலையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.