பிரச்சாரத்தின்போது திடீரென மயங்கிவிழுந்த அமைச்சர்! மருத்துவமனையில் அனுமதி!! 

  7
  Kadambur Raju

  நாங்குநேரி இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

  நாங்குநேரி இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

  நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். இதையடுத்து நாராயணனுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்க அமைச்சர் கடம்பூர் ராஜூ களக்காடு பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கிழே விழுந்தார். 

  கடம்பூர் ராஜூ

  உடனடியாக அங்கு கூடியிருந்த அதிமுக கட்சியினரும், காவல்துறையினரும் அவரை மீட்டு பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொலைப்பேசியில் தொடர்புகொண்டு சிகிச்சை பெறும் அமைச்சர் கடம்பூர் ராஜிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். நன்றாக  ஓய்வு எடுக்கவும் அறிவுறுத்தியதாக அமைச்சர் உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.