பியர் பிரியரா நீங்கள்! அப்ப உங்களுக்குத் தான் இந்த செய்தி

  0
  6
  representative image

  நம்ம கூட  இருக்குறவங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு டைப்ல இருப்பாங்க. 
  அவங்களுக்குனு வித்தியாசமா ஒரு பழக்கம் இருக்கும். அந்த மாதிரி ஒரு கேட்டகரிய சேர்ந்தவர் தான் ‘பில்’. உலகின் இதுவரை யாரும் பயன்படுத்தியிருக்க முடியாத தலையணை ஒன்றை கண்டுபிடித்துள்ளார் இவர்.

  நம் வாழ்வில் தூக்கம் ஒரு பிரிக்க முடியாத அங்கம்.தூக்கத்தில் யாராவது நம்மை தொந்தரவு செய்யும் போது வரும் எரிச்சலுக்கு அளவில்லை. 

  beer bill

  நம்ம கூட  இருக்குறவங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு டைப்ல இருப்பாங்க. 
  அவங்களுக்குனு வித்தியாசமா ஒரு பழக்கம் இருக்கும்.அந்த மாதிரி ஒரு கேட்டகரிய சேர்ந்தவர் தான் ‘பில்’. உலகின் இதுவரை யாரும் பயன்படுத்தியிருக்க முடியாத தலையணை ஒன்றை கண்டுபிடித்துள்ளார் இவர். நல்லா தூங்கிட்டு இருக்கும்போது தண்ணீர் தாகம் எடுத்தா எழுந்திரிச்சி தண்ணீர் குடிக்கிறது கடுப்பான விஷயம் தான். அந்த குறையை போக்கத்தான் பில் இந்த தலையணையை கண்டுபிடிச்சுருக்கார். அதுவும் நீங்க பியர் பிரியரா இருந்தா ஜாக்பாட் தான். ஆமாம், பியரால் நிரப்பப்பட்ட தலையணை கண்டுபிடித்திருக்கிறார் பில்.

  நள்ளிரவில் தண்ணீர் தாக்கம் எடுத்தால் தண்ணீருக்கு பதிலாக பியரை படுத்துகிட்டே குடிச்சிக்கலாம். போதை தெளியவே செய்யாது. அதே கிறக்கத்தோட தூங்கலாம். இதற்காக நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஜிப் வச்ச பாலிதீன் பேக்ல ஸ்ட்ரா போட்டு பியர் நிரப்பவேண்டியதான். 
  இனிமேல் தூக்கத்திலயும் சொர்க்கம் தான்!