பிப்ரவரி 26 ஆம் தேதி வெளியே வருகிறார் சசிகலா! சசிகலாவுக்கு ஆதரவாக நிற்கும் பாஜக!!

  0
  13
  sasikala

  சசிகலா சிறையில் இருந்து வெளி வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக நடைபெற்றுவருகின்றன. 

  சசிகலா சிறையில் இருந்து வெளி வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக நடைபெற்றுவருகின்றன. 

  சொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்போது அவர் சிறை சென்று இரண்டு வருடம் 11 மாதம் ஆகிவிட்டது. இன்னும் ஒன்றரை வருடம் அவர் சிறையில் இருக்க வேண்டும். ஆனால் தண்டனையை முழுதாக அனுபவிக்கும் முன் அவர் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

  சசிகலா

  சசிகலா வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி சிறையிலிருந்து வெளியே வருகிறார் என்றும், பாஜக, சசிகலாவை வெளியே கொண்டுவருவதற்கான வேலைகளில் இறங்கி உள்ளதாகவும் அமமுக நிர்வாகிகள் மத்தியில் ஒரு தகவல் உலாவருகிறது. குறிப்பாக, சுப்பிரமணியசாமியும், சந்திரலேகாவும் இந்த விஷயத்தில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. சசிகலா வெளியே வருவதற்கு பாஜக உதவி செய்கிறது என்றால் அதிமுகவில் அவர்களை இணைக்கவே பாஜக ஆசைப்படுகிறது என்ற அர்த்தத்தை எடுத்துக்கொள்ளலாம்.