பிணத்தை பார்க்க ஊருக்கு செல்ல வேண்டும் என்று அடம்பிடித்த புது மனைவி… கொலை செய்த கணவன்!

  16
  அய்யனார் அஞ்சலி

  இவருக்கும்  அஞ்சலி (21) என்ற பெண்ணுக்கும்  கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

  சென்னை மாதாவரத்தை சேர்ந்தவர் அய்யனார். 31 வயதான இவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும்  அஞ்சலி (21) என்ற பெண்ணுக்கும்  கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் பள்ளிக்கரணையில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். 

  ttn

  இந்நிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் அய்யனார் வீட்டின் கதவு  திறக்கப்படவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் கதவை தட்டியுள்ளனர். ஆனால்  கதவு திறக்கப்படவில்லை. ஜன்னல் வழியாக பார்த்த போது, அஞ்சலி படுக்கையில் கிடந்துள்ளார். இதையடுத்து கதவை உடைத்து கொண்டு  அங்கிருந்தவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது  அஞ்சலி சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அஞ்சலியின் உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  ttn

  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான கணவர் அய்யனாரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தன. அதில், அஞ்சலியின் உறவினர் ஒருவர் ஊரில் இறந்துள்ளார். இதனால் ஊருக்கு செல்லவேண்டும் என்று கேட்க அதை அய்யனார் வேண்டாம் என்று கூறி மறுத்துள்ளார். இருப்பினும் அஞ்சலி ஊருக்கு தனியாக செல்கிறேன் என்று கூறி கிளம்ப கணவன் மனைவி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அய்யனார் அஞ்சலியின் கழுத்தை நெறிக்க அவர் மயங்கி விழுந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது அய்யனார் போதையிலிருந்ததால் அங்கிருந்து தப்பித்தது தெரியவந்தது.  

   

  திருமணமான சில மாதங்களில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.