பிங்க் ஸ்வீட்ஸ், பிங்க் விளக்குகள் என பிங்க் நிறத்தில் மின்னும் கொல்கத்தா! கங்குலியின் புது வீடியோ!

  0
  14
  கங்குலி

  கிரிக்கெட் போட்டிகளில், இந்தியாவில் பிங்க் பந்து புதிதாய் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக கொல்கத்தா நகர் முழுவதும்  பிங்க் நிறங்களில் மின்னுவதைக் கண்டு கங்குலி ஆச்சர்யப்பட்டார். பாரம்பரியமான கொல்கத்தா இனிப்புகள் எல்லாம் பிங்க் நிறங்களில் பரிமாறப்படுகின்றன என்று பிசிசிஐயின் புதிய தலைவர் சவுரவ் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புது வீடியோவை வெளியிட்டு ஆச்சரியமடைந்திருக்கிறார்.

  kolkata

  இதையொட்டி, பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தை விளக்குகளின் கீழ் ஒரு டெஸ்ட் விளையாடும் படியும் கங்குலி கேட்டு கொண்டுள்ளார். ஈடன் கார்டனில் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் டீம் இந்தியாவின் பிங்க் பந்து அறிமுகத்திற்கு முன்னதாக கொல்கத்தாவில் பிங்க் நிற இனிப்புகள் காணப்பட்டது. இந்த வகை இனிப்புகள் வங்காள பிராந்தியத்தில் பாரம்பரியமாக உருவாகும் இனிப்புகள்.

  sweets

  பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் பிங்க் நிற பந்துகளின் அறிமுகத்தை கொண்டாடுவதற்காக சிறப்பாக தயாரிக்கப்பட்ட பிங்க் நிற இனிப்புகளின் மற்றொரு படத்துடன்,  கொல்கத்தாவின் சில முக்கிய கட்டிடங்களும் இளஞ்சிவப்பு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தனது சொந்த ஊரின் கட்டிடங்கள் பிங்க் நிறங்களில் மின்னுவதை வீடியோவாக எடுத்து அதைப் பகிர்ந்துள்ளார் கங்குலி. 

  இந்த இந்திய அணியை உலகின் மிகச்சிறந்த அணியாக மாற்றுவதில் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் அணி ஏற்கனவே மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், கங்குலியின் சேர்க்கை உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதால், தளத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.