‘பிங்க் பால்’ போட்டிக்காக இந்திய வீரர்கள் கையாளும் புதிய யுக்தி என்ன தெரியுமா?

  0
  1
  Virat

  வங்கதேச அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் பிங்க் பால் டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வரும் இந்திய வீரர்கள் புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

  வங்கதேச அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் பிங்க் பால் டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வரும் இந்திய வீரர்கள் புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

  இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதனை அடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை துவங்க இருக்கிறது. இதில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பகலிரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவில் முதல் முறையாக பிங்க் பந்து பயன்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக வீரர்கள் பிரத்யேக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

   pink ball

  இந்தூரில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் போது பகல் நேர பயிற்சியை முடித்துவிட்டு, இந்திய வீரர்கள் கொல்கத்தாவில் நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டிக்காக மாலை 5 மணி முதல் 6 மணி வரை பனிப்பொழிவை சமாளிக்க பிங்க் பந்தில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான ஒப்புதலை மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம் அளித்தது.

  டி20 போட்டியின்போது ஓய்வில் இருந்து வந்த இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி நாளை நடைபெறவிருக்கும் டெஸ்ட் போட்டிக்காக நேற்றைய தினமே இந்திய வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய அணியுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.