‘பிக் பாஸ் வீட்டில நிறைய பேரு என்ன விரும்புனாங்க..ஆனால்…’ சர்ச்சையை கிளப்பும் மீரா மிதுன் வீடியோ!

  0
  3
  மீரா மிதுன்

  பிக் பாஸ் ஹவுஸ்ல நெறைய பேரு  என்ன விரும்பினார்கள் என்று மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.  

  பிக் பாஸ் ஹவுஸ்ல நெறைய பேரு  என்ன விரும்பினார்கள் என்று மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.  

  பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களில் ஒருவராக வலம்வந்தவர் மீரா மிதுன். அழகி போட்டி நடத்துவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் வந்தன. அதேபோல் பிக் பாஸ் வீட்டுக்குள் பல சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமானார். இதையடுத்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளிவந்த வந்த மீரா மிதுன் சாண்டியை தவிர மற்ற போட்டியாளர்களைச் சாடி வருகிறார். 

  meera

  சமீபத்தில் மீரா மிதுன் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானது. அதில்  நானும் முகினும் நெருக்கமாக உள்ளது போல வீடியோ தயார் செய்து அதன் பின்னால் அவர் பாடிய பாடலை போடுங்கள். இதை சரியாக செய்தால் பணம் தருகிறேன் என்று கூறுவது  போல அந்த ஆடியோ இருந்தது. இது முகின்  ரசிகர்கள் மத்தியில் கடுங்கோபத்தை ஏற்படுத்தியது.

  இந்நிலையில் இதுகுறித்து மீரா மிதுன் விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முகின் பெயரை சொல்லி நான் ஏன்  பப்ளிசிட்டி தேடணும். முகினை மலேசியல ஒரு சிங்கர்னு தான் எல்லாருக்கும் தெரியும். இங்க யாருக்கும் தெரியாது. ஆனால் நான் 6 வருஷமா நிறைய பீல்டுல இருக்கேன்.

   

  பிக் பாஸ் ஹவுஸ்ல நெறைய பேரு  என்ன விரும்புனாங்க. யார் யாருன்னு நான் சொல்ல விரும்பல. ஆனா அவங்களுக்கு தைரியம் இல்ல. இதெல்லாம் பேச கூடாது. பிக் பாஸ் வீட்ல என்னென்ன நடந்துச்சின்னு சொல்லியிருந்தா முகின்  டைட்டில் வின் பண்ணியிருக்க மாட்டாரு.

   

  முகின்  ஓடிங்குக்கு ஏதாவது  பிரச்னை வரும்ன்னு தான் நான் சைலட்டா இருந்தேன். அதனால பழியை நான் சுமந்தேன். அவரோட பேர கெடுக்கணும்ன்னு எனக்கு அவசியம் கிடையாது. அவர் மேல எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல. அவருக்கு என்மேல  இன்ட்ரஸ்ட் இருந்திருக்கலாம்’ என்றார்.