பிக் பாஸ் வீட்டிலிருந்து வந்ததும் முதல் வேலையாக காதலியை சந்தித்த தர்ஷன்

  0
  12
  தர்ஷன்

  பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த தர்ஷன் தனது காதலி சனம்  ஷெட்டியை சந்தித்துள்ளார். 

  பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த தர்ஷன் தனது காதலி சனம்  ஷெட்டியை சந்தித்துள்ளார். 

  பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் போட்டி முடிய ஒருவார காலமே உள்ள நிலையில் தற்போது பைனலுக்கு 4 பேர் தகுதி பெற்றுள்ளனர்.  இதுவரை 12 போட்டியாளர்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.குறிப்பாக தர்ஷன் நேற்று வெளியேறியது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  tharshan

  இறுதிப் போட்டியில்  தர்ஷன் தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வெளியேறியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. சிலர் அவருக்காகக் கண்ணீர் வடித்தனர்.

  sanam

  இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தர்ஷன் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், ‘நீங்கள் அனைவரும் என் மீது காட்டிய அன்புக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உங்கள் அன்புக்கு நன்றி. இந்த 98 நாட்களும் என்னை உங்களுடைய குடும்பத்தில் ஒருவராக நினைத்ததற்கு  நன்றி. இது என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பரிசு. உங்களை விரைவில் சந்திக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

  sanam

  இதையடுத்து தர்ஷன்  தனது காதலி சனம்  ஷெட்டியை சந்தித்துள்ளார். இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.