பிக் பாஸ் வீட்டின் இந்த வாரம் தலைவர் இவர் தான்!?

  0
  2
  பிக் பாஸ்

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது   புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது   புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

  பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இதுவரை பிக் பாஸ் வீட்டிலிருந்து பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி, வனிதா ஆகியோர் வெளியேறி இருந்த நிலையில் நேற்று சேரன்  வெளியேற்றப்பட்டார். இதனால் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள்  6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். 

  sandy

  இந்தவாரம் எவிக்ஷன் பிராசஸில் இருந்து காப்பாற்ற நினைக்கும் நபரை ஒவ்வொரு போட்டியாளரும் பச்சை மிளகாய் சாப்பிட்டு காப்பாற்ற வேண்டும் என்று பிக் பாஸ் கூறுகிறார். அதன்படி தர்ஷன் சாண்டி  மற்றும் ஷெரினுக்காகவும், லாஸ்லியா கவினுக்காகவும் பச்சை மிளகாயை சாப்பிடுகிறார்.

   

  இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. அதில், இந்த வாரம் வீட்டின் தலைவர் போட்டிக்கான டாஸ்கில் சாண்டி, கவின், முகின்  ஆகியோர் பங்கேற்கின்றனர். அவர்கள் உடல் முழுவதும் டேப் சுற்றப்படுகிறது. அவ்வாறே தரையில் உருண்டு அங்கு போடப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் சென்று எழுந்து நிற்க வேண்டும். அப்படி யார் முதலில் எழுந்து நிற்கிறாரோ  அவரே வெற்றியாளர் என்று சொல்லப்படுகிறது. இதில் போட்டியாளர்கள் மூவரும் கடுமையாக முயற்சி செய்வது  போல புரொமோ  வீடியோ முடிகிறது. 

  இதில் சாண்டி கடுமையாக முயற்சிக்கிறார். ஆனால்  எவிக்ஷன் பிராசஸில்  இருந்து காப்பாற்ற சாண்டியின் பெயரை தர்ஷன் கூறியதால் சாண்டி  வெற்றி பெற்றிருக்க வாய்ப்பில்லை. அல்லது ஒருவேளை சாண்டி வெற்றி பெற்றிருந்தால் வீட்டின் தலைவர் பெயரையும் நாமினேட் செய்யும் வழக்கத்தை பிக் பாஸ் இந்த வாரம் கொண்டு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.