‘பிக் பாஸ்’ மதுமிதா வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சக போட்டியாளர்: யார் தெரியுமா?

  0
  1
  மதுமிதா

  தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாகப் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்

  கடந்த ஜூன் மாதம் விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.  பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில்  தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாகப் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்  நடிகை மதுமிதா. இருப்பினும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மதுமிதா தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்து வந்தார். தற்போது படங்களில் நடிப்பது என பிஸியாகி உள்ளார் மதுமிதா. 

  ttn

  இந்நிலையில் பிக் பாஸ் போட்டியின் சக போட்டியாளரான ரேஷ்மா மதுமிதாவை காண அவரின்  வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது மதுமிதா அவருக்கு சமைத்து விருந்து அளித்து அசத்தியுள்ளார். அதற்கான புகைப்படங்களை  ரேஷ்மா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

  முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகர் சேரன் மதுமிதா வீட்டுக்கு சென்று விருந்து சாப்பிட்டது குறிப்பிடத்தக்கது.