பிக் பாஸ் பிரபலத்துடன் ஜோடி சேர்ந்த ஹரிஷ் கல்யாண்! 

  0
  2
   ஹரிஷ் கல்யாண்

  சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் படத்தின் நாயகி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார். அதில் தற்போது  தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோதிடத்தின் மீது நம்பிக்கையுள்ள இளைஞராக நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. பாலிவுட் நடிகை ரியா சக்ரபோட்டி நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. 

   இந்நிலையில் தேதிகள் பிரச்சனை காரணமாக இப்படத்திலிருந்து ரியா விலகியதாகவும், அவருக்கு பதிலாக புதிய ஹீரோயின் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்… ஹிந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 9வது சீசனில் பங்கேற்ற டிகங்கனா சூர்யவன்ஷி நடிக்கவுள்ளார். 

  digaba

  இவர் ஏற்கனவே தெலுங்கில் ‘RX100’ ஹீரோ கார்த்திகேயா நடிப்பில் வெளியான ‘ஹிப்பி’ திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.