பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து நாடு திரும்பினார் லாஸ்லியா

  0
  3
  லாஸ்லியா

  ப்ரீஸ் டாஸ்கில் லாஸ்லியாவின் தந்தை பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து மாஸ் காட்டி ஒரேநாளில் லாஸ்லியாவின் புகழை தட்டி சென்றார்.

  பிக் பாஸ் 3 நிகழ்ச்சி முடிந்துள்ள நிலையில் லாஸ்லியா மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார். 

  பிக் பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த ஜூலை மாதம் தொடங்கி 105 நாட்களுடன்  சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் முகின் ராவ் டைட்டில்  வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் இலங்கை பெண்ணான லாஸ்லியா பங்கேற்று தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.

  losliya

  ஆரம்பத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என சுற்றி திரிந்து வந்த லாஸ்லியா சேரனுடன் மனக்கசப்பு, கவினுடன் காதல், சாக்ஷியுடன் சண்டை என பல முகங்களைக்  காட்டினார். இதனால் ஒருகட்டத்தில் லாஸ்லியாவின் போக்கு பலரையும் வெறுப்படைய செய்தது. இதையடுத்து ப்ரீஸ் டாஸ்கில் லாஸ்லியாவின் தந்தை பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து மாஸ் காட்டி ஒரேநாளில் லாஸ்லியாவின் புகழை தட்டிப்பறித்துச் சென்றார். இதை தொடர்ந்து கவினின் வெளியேறியதால், கவினின் ரசிகர்கள் லாஸ்லியாவுக்கு ஆதரவு அளித்ததாகவும். அதனால் தான் அவர் என்ன தான் சொதப்பலாக  ஆட்டத்தை ஆகியிருந்தாலும் அவரை உள்ளே நிறுத்தி, தர்ஷனை வெளியில் அனுப்பினர் என்றும் சொல்லப்படுகிறது. 

   

  இதுவொருபுறமிருக்க  சமீபத்தில் பிக் பாஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் லாஸ்லியா, கவின் உள்ளிட்ட போட்டியாளர்கள் பங்கேற்று  ஆட்டம், பாட்டம் என பிக் பாஸ் வெற்றியைக் கொண்டாடினர். 

  losliya

  இந்நிலையில் லாஸ்லியா மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார். அப்போது லாஸ்லியாவை கண்ட பலரும் அவருடன் செல்பி எடுத்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.