பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ப்ரைஸ் விசிட் அடிக்கும் கவின்: இன்னும் என்னென்ன நடக்க போகுது தெரியுமா?

  0
  2
  கவின்

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

   

  bb

  பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை 11 போட்டியாளர்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில்  தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள்  5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.  இந்த வாரம்  ஆறு போட்டியாளர்களுமே எவிக்ஷன் பிராசஸில் இருந்த நிலையில் கவின் திடீரென்று எதிர்பாராத விதமாக பிக் பாஸ் கொடுத்த ஆஃபர் 5 லட்சத்துடன் வெளியேறினார். முகின்  நேரடியாக பைனலுக்கு சென்றதால் எவிக்ஷன் பிராசஸில் தற்போது 4 பேர் மட்டுமே உள்ளனர்.

  இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கமல் ஹாசன், ‘என்ன கவின் இப்படி பண்ணிட்டாரு? ஏன்  கவின் இப்படி பண்ணாரு போன்ற கேள்விகளுக்கு கவின் தான் பதில் சொல்ல வேண்டும்’ என்று கூறுகிறார். அதன்படி கவின் இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னிலை விளக்கம் அளிப்பார் என்று கூறப்படுகிறது. 

  bb

  மேலும் இன்றைய நிகழ்ச்சியில் கவினுக்கு 5 லட்சம் காசோலை வழங்கப்படும் என்றும் அவருடன் ஹவுஸ்மேட்ஸ் ஜாலியாக உரையாட இருப்பதாகவும், சாண்டி  இன்று பைனல்ஸ் செல்ல நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.