பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தர்ஷன் செல்ல யாரு காரணம் தெரியுமா?

  11
  தர்ஷன்

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷனுக்கு யார் சிபாரிசு செய்தது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

  சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷனுக்கு யார் சிபாரிசு செய்தது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு சீசன்களை விட இந்த சீசன்னில் அதிகமாக வெளிநாடு போட்டியாளர்கள்  உள்ளனர். அதில் ஒருவர் தான் மாடல் தர்ஷன். இலங்கையை நாட்டை பூர்விகமாகக் கொண்ட இவர், சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவிற்கு வந்தார். 

  பின்பு படங்களில் வாய்ப்பு கிடைக்காததால், மாடல் துறையில் பணியாற்றி வந்துள்ளார். இவரும், மாடல் அழகியான சனம் ஷெட்டி என்பவரும் காதலித்து வருவதாக ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில் இவரை வைத்து போட்டோ ஷூட் நடத்திய ஜோவி சமீபத்தில் பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் தர்ஷன் குறித்துக் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்குப் பதிலளித்தார். 

  அவர் கூறியதாவது, ‘தர்ஷண் குழந்தை போல தான். நல்ல பையன் திட்டினால் அழுதுவிடுவான்.அவரின் கெட்ட குணம் எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துவது, அனைவரையும் நம்புவது. அவரை நடிகை சனம் ஷெட்டி மூலமாகத் தான் தெரியும். தர்ஷணை போட்டோ ஷூட் செய்யவைத்ததும் சனம் தான். 

  sanam

  அதுமட்டுமின்றி அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குச் செல்ல முக்கிய காரணம் அவர் தான். அவங்க தான் தர்ஷனுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்ததே’ என்று கூறியுள்ளார்.