பிக் பாஸ் தர்ஷனுக்கு அடித்த ஜாக்பாட்: மெகா கூட்டணியுடன் கிடைத்த முதல் வாய்ப்பு?!

    0
    1
     தர்ஷன்

    ராஜமுந்திரி சிறைச்சாலை சென்னை திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் படப்பிடிப்பு  தொடர்ந்து நடந்து வருகிறது. 

    சென்னை: ‘இந்தியன் 2’ படத்தில் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்தியன் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் 22 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் 2 உருவாகி வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் மாபெரும் படைப்பாகத் தயாராகி வரும் இப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.   இந்த படத்தை  லைகா புரடக்‌ஷன் தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

    tharshan

    இப்படத்தின் படப்பிடிப்பு ஈவிபி  பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக செட் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் கமல் அரசியல்,  பிக் பாஸ் என்று தொடர்ச்சியாக பிஸியாகி விட்டதால் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. ராஜமுந்திரி சிறைச்சாலை சென்னை திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் படப்பிடிப்பு  தொடர்ந்து நடந்து வருகிறது. 

    tharshan

    இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் பிக் பாஸ் தர்ஷன் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் வெற்றியாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன், இந்தியன் 2 படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததாகவும், கமலை இதுகுறித்து பேசியதாகவும் கோலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது.