பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளரை மீம் போட்டு கலாய்த்த யாஷிகா: வைரல் புகைப்படம்!

  0
  2
  யாஷிகா ஆனந்த்

  நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் பாத்திமா பாபுவை ஒப்பிட்ட மீம் ஒன்றை யாஷிகா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

  சென்னை:  நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் பாத்திமா பாபுவை ஒப்பிட்ட மீம் ஒன்றை யாஷிகா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

  ரசிகர்கள்  ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்த முறையும்  கமல்ஹாசனே  தொகுத்து  வழங்குகிறார். நமக்கு மிகவும் பரிட்சயமான முகங்கள்  இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளதால் போட்டி கடந்த சீசனை விட இந்த முறை சுவாரஸ்யமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

  yashika

   பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள்  முதல் போட்டியாளராக நுழைந்த பாத்திமா பாபு  தண்ணீருக்கு மீட்டர் பொருத்தியுள்ளது குறித்து கைதட்டி வரவேற்ற சக போட்டியாளர்களைக் கடிந்து கொண்டார். இதனால் ஹவுஸ்மேட்ஸ் அப்செட்டாகினர்.

  fathima

  இந்நிலையில்  பிக் பாஸ்  சீசன் 2 வில் பங்கேற்ற  யாஷிகாவுடன் பாத்திமா பாபுவை ஒப்பிட்டு மீம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர் யாஷிகாவை பார்த்து சிரிப்பது போலவும்,  பிக் பாஸ் சீசன்3  போட்டியாளர் பாத்திமாவை பார்த்து முறைப்பது போலவும் அந்த மீம் உள்ளது. இதைத் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் யாஷிகா பதிவிட்டுள்ளார். 

  yashika

  பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிலேயே பாத்திமா பாபு தான்  சீனியர். அதனால் அவரது வயதை வைத்து கலாய்ப்பது போல இந்த மீம்  இருக்கிறது. அதே நேரத்தில் யாஷிகா கடந்த சீசனில் போட்டியிட்ட  போட்டியாளர்களிலேயே வயது குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.