பிக் பாஸ் கொண்டாட்டம்: டான்ஸ் ரிகர்சலில் ஈடுபட்டுள்ள லாஸ்லியா ; வைரல் வீடியோ!

  0
  7
  லாஸ்லியா

  பிக் பாஸ் இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவார் என்று பலராலும் பாராட்டப்பட்ட தர்ஷனையே வெளியில் அனுப்பி லாஸ்லியாவை காப்பாற்றினார் பிக் பாஸ்

  பிக் பாஸ் கொண்டாட்டத்திற்காக பிக் பாஸ் பிரபலம் லாஸ்லியா  நடனம் கற்று வருகிறார். 

  பிக் பாஸ்  3  நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது.இதில் முகின் ராவ் டைட்டில்  வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர். 

  losliya

  லாஸ்லியா ஒன்று இரண்டு வாரங்களிலேயே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவார்  என்று நினைத்த நிலையில் வாரங்கள் செல்ல செல்ல அவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது.

  losliya

  ஒருகட்டத்தில் பிக் பாஸ் இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவார் என்று பலராலும் பாராட்டப்பட்ட தர்ஷனையே வெளியில் அனுப்பி லாஸ்லியாவை காப்பாற்றினார் பிக் பாஸ். இதுபலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்தது. 

   

  இந்நிலையில் பிக் பாஸ் கொண்டாட்டத்திற்காகப் போட்டியாளர்கள் தயாராகி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் லாஸ்லியா நிகழ்ச்சியில் நடனம் ஆட ரிகர்சல் செய்துகொண்டிருக்கிறார். அப்போது அவருடன் பலரும் டிக் டோக்  வீடியோ எடுத்துக்கொண்டுள்ளனர். இந்த வீடியோவானது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

   

  பிக் பாஸ் வீட்டிலிருந்த வெளியே வந்த லாஸ்லியா -கவின் சந்தித்த புகைப்படங்கள் வெளியிடப்படவில்லை. இதனால் பிக் பாஸ் கொண்டாட்டத்தில் லாஸ்லியாவுடன் கவின் நடனம் ஆட வேண்டும் என்று அவர்களது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.