பிக் பாஸ் கொடுத்த ஆஃபர்: 5 லட்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய கவின்!?

  14
  கவின்

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது   புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது.

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது   புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

  பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை 10 போட்டியாளர்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில்  தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள்  6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.  இந்த வாரம் இந்த ஆறு போட்டியாளர்களுமே எவிக்ஷன் பிராசஸில் உள்ளனர். நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களான  யாஷிகா மற்றும் மகத் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை புரிந்திருந்தனர். அதேபோல் இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் ஜனனி மற்றும் ரித்விகா ஆகியோர் வருகின்றனர்.

   

  இந்நிலையில்  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது   புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது.  அதில் பிக் பாஸ், உங்களில் ஒருவர் மட்டும் தான் இந்த போட்டியில் வெற்றி பெற்று ரூ. 50 லட்சத்தைப் பெற முடியும். இதனிடையில் ரூபாய் 5 லட்சத்தை எடுத்து கொண்டு இந்த வீட்டை விட்டு இன்றே வெளியில் செல்லும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படுகிறது என்கிறார். இதை கேட்ட கவின்  எழுந்து நிற்கிறார். இதை கண்டு  சாண்டி  டே காமெடி பண்ணுறியா என்ன பண்ணுற  நீ? என்று கேட்கிறார். 

  kavin

  கடன் சுமை அதிகமுள்ள கவின் ஏற்கனவேகாதல் விவகாரத்தில் சிக்கி மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில் பிக் பாஸ் கொடுக்கும் பணத்தைப் பெற்றுக் கொண்டு வெளியேறுவார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.