பிக் பாஸ் இறுதி போட்டியில் தர்ஷனுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்: மேடையில் அறிவித்த கமல்

  0
  3
  தர்ஷன்

  பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் நண்பர்களுடன் சந்திப்பு, ஆட்டம் பாட்டம் என்று ஜாலியாக இருக்கிறார்

  நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் தயாரிப்பில்  பிக் பாஸ் தர்ஷன் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருந்தாலும்   தர்ஷனின்  வெளியேற்றம் இன்னும் அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிகழ்வாகவே உள்ளது.  தர்ஷன் வெளியேற்றத்திற்கு ஷெரின் தான் காரணம்  என்று அவரது காதலி சனம் ஷெட்டி கூறியிருந்தார். அதேபோல வனிதா அந்த குற்றச்சாட்டை வைக்க தவறவில்லை.

  tharshan

  பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் நண்பர்களுடன் சந்திப்பு, ஆட்டம் பாட்டம் என்று ஜாலியாக இருக்கிறார். இதனிடையில், இந்தியன் 2 படத்தில் பிக் பாஸ் தர்ஷன் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியானது. இதனால் தர்ஷன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

  tharshan

  இந்நிலையில் தர்ஷன் இந்தியன் 2 படத்தில் நடிக்கவில்லை என்றும் அதற்கு பதிலாக கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் தயாரிப்பில் ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த அறிவிப்பைக் கமல் பிக் பாஸ் மேடையில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.