‘பிக் பாஸில் கேமரா முன்பு உறவு வைத்துக்கொள்ளச் சொன்னார்கள்’! ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார் 

  0
  1
  ஸ்ரீ ரெட்டி

  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைக்கப்பட்ட நிபந்தனை குறித்து நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார். 

  சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைக்கப்பட்ட நிபந்தனை குறித்து நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார். 

  தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்களின் பெயர்களை ஆதாரத்துடன் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவர் தனது புகாரை எடுக்கக்கோரி நிர்வாணப் போராட்டத்திலும் ஈடுபட்டார். பின்னர் தொடர்ந்து தனது சமூகவலைத்தள பக்கம் மூலம் பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 

  இந்த நிலையில் இவர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கலந்து கொள்ளவில்லை. அவர் ஏன் கலந்துகொள்ளவில்லை? என்பது  குறித்து பலரும் கேள்வி கேட்டு நச்சரித்து வந்தனர். 

  bigg boss

  அவர்களின் கேள்விக்குப் பதிலளித்த ஸ்ரீ ரெட்டி, ‘பிக்பாஸ் வாய்ப்பு பற்றி பேச வேண்டும் என்று ஹைதராபாத் கோல்கொண்டா ஓட்டலுக்கு வரச் சொன்னார்கள். அங்கு போன பிறகு அபிஷேக் என்பவர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார்…. நீங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் பிடித்தவருடன் கேமராக்கள் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது போர்வைக்குள் உறவு வைத்துக் கொள்ளத் தயாரா? என்றும் குட்டையான உடைகள் அணியத் தயாரா என்று கேட்டார். 

  அதுமட்டுமின்றி என்னுடைய உடல் பாகங்களின் அளவையும் கேட்டார். இதுபோன்று கேள்வி எழுப்பியதால் கோபமடைந்த நான் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றுவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.