பிக் பாஸில் கலந்து கொள்கிறேனா? நடிகை லைலா விளக்கம்!

    0
    1
    லைலா

    ‘பிக் பாஸ் 3’-ல் பங்கேற்கவுள்ளார் என்று வெளியான செய்திக்கு, தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் விளக்கமளித்துள்ளார் நடிகை லைலா.

    சென்னை: ‘பிக் பாஸ் 3’-ல் பங்கேற்கவுள்ளார் என்று வெளியான செய்திக்கு, தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் விளக்கமளித்துள்ளார் நடிகை லைலா.

    ‘தீனா’, ‘கண்டநாள் முதல்’, ‘பிதாமகன்’ உள்ளிட்ட படங்களில் தனது வெகுளித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் நடிகை லைலா. அவர் தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘அலைஸ்’ எனும் படத்தில் ரைஸாவுடன் இணைந்து நடித்து வருகிறார். 

    இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீஸன் 1 மற்றும் சீசன் 2 நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்நிகழ்ச்சி ஒளிபரப்பான போது பங்கேற்பாளர்களின் ஒவ்வொரு செயலும் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளானது.

    bigg boss

    தற்போது அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள கமல்ஹாசன், ‘பிக் பாஸ்’ சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது. இந்த நிலையில்  இவிபி ஃபிலிம் சிட்டியில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் புரொமோக்கான ஷூட்டிங் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    laila

    அதைத் தொடர்ந்து, இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலா வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக நடிகை லைலாவும் இதில் கலந்து கொள்ளவிருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து நடிகை லைலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதாக வெளியான செய்தியை மிகக் கடுமையாக மறுத்துள்ளார்.