பிக்பாஸ் முகென் மேல் வெறித்தனமான காதல்! உடலில் பச்சை குத்திக் கொண்ட ரசிகர்!

  0
  2
  முகென் ராவ்

  ஒவ்வொரு முறையும் பிக்பாஸ் சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் போது பரபரப்பாக ஒருசிலர் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொள்வார்கள். இந்த நிகழ்ச்சி நிறைய விமர்சனங்களைப் பெற்றாலும், உலக தமிழர்களிடையே அதிக வரவேற்பையும், ஆதரவையும் பெற்றுள்ளது. மற்ற இரண்டு சீசன்களும் பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போலீஸ் புகார், தற்கொலை முயற்சி, குழாயடி சண்டை என்று ரசிகர்களிடையே நிறையவே மாஸ் காட்டுச்சுங்க.

  ஒவ்வொரு முறையும் பிக்பாஸ் சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் போது பரபரப்பாக ஒருசிலர் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொள்வார்கள். இந்த நிகழ்ச்சி நிறைய விமர்சனங்களைப் பெற்றாலும், உலக தமிழர்களிடையே அதிக வரவேற்பையும், ஆதரவையும் பெற்றுள்ளது. மற்ற இரண்டு சீசன்களும் பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போலீஸ் புகார்,

  mugen

  தற்கொலை முயற்சி, குழாயடி சண்டை என்று ரசிகர்களிடையே நிறையவே மாஸ் காட்டுச்சுங்க. பலத்த வரவேற்புக்கிடையே இந்த நிகழ்ச்சி முடிவுற்றாலும், இதில் கலந்து கொண்டவர்களுக்கு உலகம் முழுக்கவே வரவேற்பு இருந்தது. அதில், அனைவர் மனதிலும் தனி இடம் பிடித்தவர் முகென் ராவ். தன்னுடைய திறமையாலும், விடாமுயற்சியாலும் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி வந்த முகென், பிக்பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் பட்டத்தையும் தட்டி சென்றார். 
  பாடலாசிரியர், பாடகர், நடிகர், மாடலிங் என பன்முக திறமைகளை கொண்டுள்ள முகென் ராவ்வை மலேசியாவின் பாப் பாடகர் என்று தான் எல்லோரும் அழைக்கிறார்கள். பிக்பாஸ் வீட்டில் ‘நீதான் நீதான்’ என்ற பாடல் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து உள்ள முகெனுக்கு தீவிரமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

  tatoo

  அதிலும் முகென் மீது வெறித்தனமான காதலுடன் இருக்கும் ரசிகர் ஒருவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடையாளத்தை போட்டு எம்.ஜி.ஆர் என்று பச்சை குத்திக் கொண்டு உள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.