பிக்பாஸ் சாண்டி- காஜல் ஜோடிக்கு இரண்டு குழந்தைகளா? லவ் டார்ச்சர் செய்த நடிகை!

  0
  12
  சாண்டி

  பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும் தருவாயில், அதில் கலந்து கொண்டவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் பல அதிர்ச்சியான தகவல்கள் தினம் தினம் வெளிவந்துக் கொண்டே இருக்கிறது. இந்நிகழ்ச்சி துவங்கியதில் இருந்தே ஒவ்வொரு போட்டியாளர்கள் குறித்தும் எல்லா விஷயங்களையும் ஒவ்வொன்றாய் சொல்லி வருகிறார், முன்னாள் போட்டியாளரும், நடன இயக்குநர் சாண்டியின் முன்னாள் காதலியுமான நடிகை காஜல் பசுபதி.

  sandy

  அதுவும் இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே சாண்டிக்கு ஆதரவாக தொடர்ந்து பேட்டிகளையும் கொடுத்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி வரை கோரியோகிராஃப் செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ள சாண்டி ஒருவர் மட்டும் தான், பிக் பாஸ் வீட்டில் அனைவரையும் கவலைகளை மறக்கச் செய்து சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். 
  டான்ஸ் மாஸ்டர் சாண்டி, நடிகை காஜலுடன் பல ஆண்டுகளாக லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தார். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவ் வேறுபாடு காரணமாக காஜலை பிரிந்தார். அதன் பின் சில்வியா என்ற பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் அவரை திருமணமும் செய்து கொண்டார். இந்நிலையில் சாண்டிக்கும் காஜலுக்கு திருமணத்திற்கு பின்னர் இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பதாகவும் சமீபத்தில் ஊடகத்தில் செய்திகள் பரவியது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் ட்விட்டரில் காஜலிடம் கேட்டுள்ள போது, எனக்கு எந்த குழந்தையும் இல்லை, அதை நான் தவற விட்டு விட்டேன்.

  sandy and kajal

  இதுபற்றி நான் பல முறை அவரிடம் சொனேன். தற்போது வரை அதை நினைத்து நான் வருத்தப்பட்டு வருகிறேன். ஏற்கனவே, சாண்டி தன்னை விட்டு பிரிந்ததற்கான காரணத்தை கூறிய காஜல், என்னுடைய பிரேக் -அப் பெரிய கதை, நம்ம லவ் டார்ச்சர் தான். வல்லவன் ரீமாசென் மாதிரி பண்ணா யார் தாங்குவா என்று பதில் கூறியுள்ளார். மேலும், இப்போது நான் அவருக்கு ஒரு நல்ல தோழி மட்டும் தான் என்றும் கூறியிருந்தார்.