‘பிக்பாஸ்’ சர்ச்சை பேச்சு: பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நடிகர் சரவணன்

  7
  சரவணன்

  கல்லூரியில் படிக்கும் போது நான் தவறு செய்திருக்கிறேன். அதுபோல யாரும் செய்யாதீர்கள் எனச் சொல்வதற்காகத்தான் கையை தூக்கினேன்

  கல்லூரி படிக்கும் போது பேருந்தில் பெண்களை உரசியுள்ளேன் என்று கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அது குறித்து  நடிகர் சரவணன்  மன்னிப்பு கேட்டுள்ளார். 

  kamal

  கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கடந்த 28ஆம் தேதி, மீரா மிதுன் – சேரன் விவகாரத்தைப் பஞ்சாயத்து செய்த கமல் ஹாசன், குறும்படம் மூலம் சேரன் எந்த தவறும் செய்யவில்லை என்பதை உறுதி செய்தார் மேலும் மீராவுக்கு அறிவுரை வழங்கும் போது, நீங்கள் பேருந்தில் பயணம் செய்ததுண்டா? அதில் வேண்டுமென்றே பெண்களை உரச வேண்டும் என்ற எண்ணத்தில் வருபவர்களும் உண்டு என்று கமல்ஹாசன் கூற, நான் செய்திருக்கிறேன் சார் என்று கையை தூக்கினார் சரவணன்.

  saravanan

  அப்போது கமலோ, பொதுவெளியில் கூறி  சரவணன் அதையும் தாண்டி புனிதராகிவிட்டார் என்று கூற அதற்குப் பார்வையாளர்கள் அனைவரும் கை தட்டினர். இந்த விவகாரம் வலைதளங்களில்  கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. பாடகி சின்மயி உள்ளிட்ட ஏராளமானோர் சரவணனுக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறி வந்தனர்.

   

  இந்நிலையில் நேற்றைய போட்டியில்  சரவணனிடம் இதுகுறித்து கூறிய பிக் பாஸ்  மன்னிப்பு கேட்கும்படி கூறினார். அப்போது பேசிய சரவணன், ‘கல்லூரியில் படிக்கும் போது நான் தவறு செய்திருக்கிறேன். அதுபோல யாரும் செய்யாதீர்கள் எனச் சொல்வதற்காகத்தான் கையை தூக்கினேன். ஆனால் அப்போது அதைச் சொல்லமுடியாமல் போனது. வேற எந்த காரணத்திற்காகவும் நான்  அதைச் சொல்லவில்லை. நான் கூறியது வருத்தம் ஏற்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்’ என்று கூறி இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.