பிக்பாஸ் இந்த வாரம் நாமினேட் ஆறவங்க யார் யார்?

  0
  2
  பிக்பாஸ்

  பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும்  பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்பது அடுத்த வாரத்தில் தெரிந்து விடும்.

  பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும்  பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்பது அடுத்த வாரத்தில் தெரிந்து விடும். இந்நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில்,  பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகை வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார்.

  vanitha

  நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நடைபெற்றது . போட்டியில் இன்னும் ஏழு போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இந்த வாரம் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் நபர் நாமினேஷனில் இடம் பெற மாட்டார். எனவே மீதமுள்ள ஆறு பேரில் யார் நாமினேட் ஆவார்கள் என்று ரசிகர்கள் பலத்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். 
  இந்நிலையில் இந்த வாரத்தின் நாமினேஷன் நேற்று நடைபெற்று முடிந்தது. அதில் சேரன், கவின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளனர்.

  biggboss

  பிக்பாஸ் நிகழ்ச்சியில், நேரடியாக இறுதி போட்டிக்கு செல்லும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் துவங்கப்பட்டது. இந்த டாஸ்கில் முதல் இடத்தில் தர்ஷனும் அவரை தொடர்ந்து சாண்டி, சேரன், முகென், ஷெரின், லாஸ்லியா, கவின் ஆகியோர்களும் இருந்து வருகின்றனர். இந்த டாஸ்க் இந்த வாரம் முழுக்கவே தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தற்போது நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ள ப்ரோமோவில் தர்ஷன் மற்ற போட்டியாளர்களுக்கு சில பெயர்களை டெடிகேட் செய்கிறார்.