பிக்பாஸ்ல யாருக்குமே கிடைக்காத பெருமை… முகெனுக்கு கிடைத்த அரசாங்க வரவேற்பு!

  16
  முகென்

  தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி உலக மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இதற்கு முன்பாக ஒளிபரப்பான மற்ற இரண்டு சீசன்களை விட சீசன் 3 அதிகளவில் பரபரப்பையும் ஏற்படுத்தி ரசிகர்களின் ஆதரவையும் பெற்றது. அனைவர் மனதிலும் இடம் பிடித்து பிக்பாஸ் டைட்டில் வின்னராகவும் தேர்வான முகென் ராவ் இன்று உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

  தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி உலக மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இதற்கு முன்பாக ஒளிபரப்பான மற்ற இரண்டு சீசன்களை விட சீசன் 3 அதிகளவில் பரபரப்பையும் ஏற்படுத்தி ரசிகர்களின் ஆதரவையும் பெற்றது.

  mugen rao

  அனைவர் மனதிலும் இடம் பிடித்து பிக்பாஸ் டைட்டில் வின்னராகவும் தேர்வான முகென் ராவ் இன்று உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். மலேசியாவின் பாப் பாடகர் என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் முகென் ராவ் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்கு முன்பே பாடலாசிரியராகவும், பாடகர், நடிகர், மாடலிங் என பல திறமைகளை கொண்டு ரசிகர்களைக் கவர்ந்திருந்தவர். இந்நிலையில், மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவில் முன்பாக நின்றபடியே முகென், பிக்பாஸ் சீசன்3ல் தான் வாங்கிய ட்ராபியை ரசிகர்களிடம் காட்டி மகிழ்ந்தார்.

  தற்போது முகென் மலேசியா பிரதமரை நேரில் சந்தித்து, பிரதமருடன் தான் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதுவரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் யாருமே எந்தவொரு நாட்டின் பிரதமரையும் நேரில் சந்தித்தது கிடையாது. அந்த விதத்தில் ஒரு நாட்டின் பிரதமர் வரையில் தனது புகழ் வெளிச்சத்தால் சாதித்துள்ளார் முகென்.