பிகில் வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்!

  0
  7
  விஜய் ரசிகர்கள்

  இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

  பிகில்  படம் வெற்றியடைய விஜய் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினர். 

  நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

  BIGIL

  இப்படத்தில் விஜய்க்கு  ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. 

  BIGIL

  இந்நிலையில் பிகில்  திரைப்படம் வெற்றியடைய நாகை மாவட்டம் மயிலாடுதுறை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரசன்ன மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  மேலும் விஜய் ரசிகர்கள் , விஜய் நீண்ட ஆயுளுடன் வாழ கோயில் வளாகத்தில் மண் சோறு சாப்பிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். பிகில்  படத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாகத் தெரிவித்த அவர்கள் படம் வெற்றியடையவும் தங்கள் வாழ்த்துகளைத்  தெரிவித்தனர்.