பிகில் பட ஆடியோ வெளியீடு! ஹெல்மெட் வழங்கிய ரசிகர்கள்!! 

  0
  1
  helmet

  பிகில் பட ஆடியோ வெளியீட்டை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் சென்னையில், பொதுமக்களுக்கு இலவச ஹெல்மெட்களை வழங்கினர். 

  பிகில் பட ஆடியோ வெளியீட்டை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் சென்னையில், பொதுமக்களுக்கு இலவச ஹெல்மெட்களை வழங்கினர். 

  அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில் நடிகர் விஜயின் பேச்சை கேட்க ரசிகர்கள் பலர் டிக்கெட்களை அடித்து பிடித்து வாங்கி இசைவெளியீட்டு விழாவுக்கு சென்றுள்ளனர். விஜய் தனது அரசியல் அவதாரத்தை பற்றி இந்த விழாவில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  bigil
  இந்த நிலையில் ஆடியோ வெளியீட்டால் உற்சாகமாக இருக்கும் விஜய் ரசிகர்கள் ராயபுரத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக ஹெல்மெட்களை வழங்கினர். ராயபுரம் சூரியநாராயண தெருவில் உள்ள ராயபுரம் போக்குவரத்து காவல் நிலையம் அருகே ஆய்வாளர் கோதண்டம் தலைமையில் போலீசார் ஹெல்மெட் இல்லாமல் வருபவர்களை பிடித்து வழக்குபதிவு செய்து கொண்டிருந்தனர். அவ்வாறு ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்து அபராதம் செலுத்திய 50 பேருக்கு விஜய் ரசிகர்கள் இலவச ஹெல்மெட்களை விஜய் ரசிகர்கள் வழங்கினர்.