‘பிகில்’ படத்துக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு திட்டவட்டம்!

  0
  3
   அமைச்சர் கடம்பூர் ராஜு

  நேரத்தை  தவிர்த்து திரைப்படத்தைத் திரையிட்டால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். 

  தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் பிகில்  உள்ளிட்ட எந்த படத்திற்கும் சிறப்பு காட்சிகள் இல்லை என 
  அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

  நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில்  திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. பிகில்  படத்தின் சிறப்பு காட்சிகள் ஏதேனும் உள்ளதா என்ற தகவல் வெளியாகமல் இருந்த நிலையில் தற்போது அது குறித்து  தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கமளித்துள்ளார். 

  BIGIL

  இந்நிலையில் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு,  தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.  அதை மீறி சிறப்பு காட்சிகள்,  அதிக கட்டணம் என திரையரங்கு வசூலித்தால் அரசு அதற்கு பொறுப்பேற்காது. அதே போல் அரசு நிர்ணயித்த நேரத்தை  தவிர்த்து திரைப்படத்தைத் திரையிட்டால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். 

   தமிழக அரசின் இந்த அறிவிப்பால் ரசிகர்களும், திரையரங்க உரிமையாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.