பிகில் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் இதுதான்!?

    0
    2
    பிகில்

    பிகில்  திரைப்படத்தில் எந்த காட்சிகளைத் தணிக்கை  வாரியம் நீக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    பிகில்  திரைப்படத்தில் எந்த காட்சிகளைத் தணிக்கை  வாரியம் நீக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    bigil

    நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். தெறி, மெர்சல் ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர்  சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    bigil

    இந்நிலையில் இப்படத்துக்கு யு/ஏ  சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 59 நிமிடங்கள் ஆகும். இதனால்  பிகில் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். 

    bigil

    இந்நிலையில் பிகில் படத்தில் எந்தெந்த காட்சிகள் நீக்கப்பட்டது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில்   சென்சார் போர்டுக்கு நன்றி என்ற வாசகத்தை  நீக்கியுள்ளது. அதேபோல்  ரத்தம் தெறிக்கும் காட்சி ஒன்றையும், இரண்டு ஆபாச  வார்த்தைகளையும் நீக்கியுள்ளது. மேலும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதால் கோர்ட் , டெல்லி  என்ற வார்த்தைகள்  வரும் இடத்தில் மியூட் செய்துள்ளதாகத் தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.