பிகில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இதோ!

  0
  2
  பிகில்

  நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்

  பிகில் படத்தின்  ரிலீஸ் தேதி இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  bigil

  நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

  bigil

  இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.   இந்த அறிவிப்பால்  விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.  முன்னதாக இப்படத்துக்கு யு/ஏ  சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.  அதன்படி படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 59 நிமிடங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.