பிகில் திரைப்படத்தை திரையிடவில்லை: பிரபல திரையரங்கம் அறிவிப்பு!

  0
  1
   பிகில்

  இப்படத்தின் டிரைலர்  சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வரும் 25ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது

  நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில்  திரைப்படத்தை வெளியிடும் முயற்சியிலிருந்து தியேட்டர்கள் சில பின்வாங்கியுள்ளது. 

  bigil

  நடிகர் விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் பிகில். இப்படத்தில் விஜய் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர்  சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வரும் 25ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது. இதனால் நேற்று முதல்  பிகில் திரைப்படத்துக்கான முன்பதிவு தொடங்கி டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. படத்தின் எந்தளவுக்கு எதிர்பார்ப்பு உள்ளதோ, அதே அளவுக்கு திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. 

  காரணம் பிகில் திரைப்படம் ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருப்பதால் அதைவிட பலமடங்கு அதிகமாக படத்தின் விலையை நிர்ணயித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதனால் பிகில்  திரைப்படத்தை வெளியிடும் முயற்சியில் இருந்து தியேட்டர்கள் சில பின்வாங்கியுள்ளது. 

  gk cinemas

  இந்நிலையில் சென்னை போரூரில் உள்ள ஜி.கே.சினிமாஸ், ‘விநியோகஸ்தர்களுடனான உறவில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத சில காரணங்களால் பிகில் திரைப்படத்தை திரையிடமுடியவில்லை. ஆதரவளித்த தயாரிப்பாளர் தனஞ்ஜெயனுக்கு நன்றி. உங்களை ஏமாற்றியதற்கு மன்னிக்கவும்’ என்று கூறியுள்ளது. இதனால் இந்த பிரச்னையை விரைந்து முடிக்க தயாரிப்பு தரப்பு முடிவெடுக்கும்’ என்று எதிர்பார்க்கப்படுகிறது.