பிகில் குறித்த வதந்திகளை நம்பாதீர்கள்- தயாரிப்பாளர் அர்ச்சனா வேண்டுகோள்

    0
    1
    Bigil

    விஜய் நடிப்பில் உருவாகிவரும் பிகில் படத்தின் ரிலீஸ் பற்றிய வதந்திகளை நம்பாதீர்கள் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

    விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். வெறித்தனம், சிங்கப்பெண்ணே ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் 19-ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

    bigil

    இந்நிலையில், தயாரிப்பாளர் அர்ச்சனா, பிகில் படம் சென்சாருக்கு சென்ற பிறகு ரிலீஸ் தேதியை நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். அதுவரை இப்படம் குறித்து வெளியாகும் ரிலீஸ் தேதி மற்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.